ரசிகர்கள் மகிழ்ச்சி..!! விருதுகளை தட்டித்தூக்கிய சூர்யா படங்கள்..!

 
1

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் வகையில் தென்னிந்திய பார்லே ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் 67வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆறு விருதுகளை வென்றுள்ளது.

Filmfare

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கு சிறந்த இயக்குனர் விருதும், இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும், அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சூரரைப் போற்று படத்தில் இடம்பெறும் ஆகாசம் பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Suriya

மேலும் சிறந்த படத்துக்கான விருதை ஜெய் பீம் வென்றது. இந்த விருதை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் பெற்றுக்கொண்டார். அதேபோல் இப்படத்தில் செங்கேணியாக நடித்திருந்த நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. ஜெய்பீம் திரைப்படம் ஃபிலிம்பேரில் 2 விருதுகளை வென்று அசத்தியது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பசுபதிக்கும் ஊர்வசிக்கும் சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தெலுங்கில் புஷ்பாவும் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் படங்கள் சிறந்த படங்களாக விருது பெற்றன. அல்லு அர்ஜூன் சிறந்த தெலுங்கு நடிகராகவும் சாய் பல்லவி சிறந்த தெலுங்கு நடிகையாகவும் பிலிம்பேர் விருது பெற்றனர்.

From Around the web