ரசிகர்கள் குஷி..!! விரைவில் ஒடிடியில் வெளியாகிறது விருமன் திரைப்படம்..!! 

 
1

கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக  இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணி விருமன் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் இந்தப் படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண்,ஆர்கே சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, வடிவுக்கரசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். 

இந்நிலையில், விருமன் தமிழ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.எம் முத்தையா எழுதி இயக்கி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி மற்றும் ராஜ் கிரண் நடித்துள்ள விருமன் படம் செப்டம்பர் 11 அன்று பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்தி ஆகியோர் தந்தை-மகன் வேடத்தில் நடித்துள்ள இத் திரைப்படத்தை இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் காணமுடியும்.


 

From Around the web