ரசிகர்கள் கொண்டாட்டம்..!!கமல் பிறந்த நாளும்.. விக்ரம் படத்தின் 100வது நாளும் ஒரே நாள்..!! 
 

 
1

நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வசூலில் பட்டையைக் கிளப்பிய விக்ரம் திரைப்படத்தின் 100 ஆம் நாள் கொண்டாட்டத்திற்கு படக்குழு தயாராகி வருகிறது.ம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.440 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியது. மேலும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விக்ரம் படம் அதிக கவனம் பெற்றது.

1

இந்நிலையில் படம் வெளியாகி 100வது நாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி விக்ரமின் 100வது நாள் விழாவை கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது. அன்று கமல்ஹாசன் பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பாக மாறியுள்ளதால் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு படக்குழு தயாராகி வருகிறது.ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி  விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெகுவிமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்ற விக்ரம் திரைப்படத்தின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா நவம்பர் 7ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.  

From Around the web