கொண்டாட்டத்தில் ரசிகர்கள்... 26 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்த அஜித் படம்..!!  

 
1

அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சூர்யா எனும் கதாபாத்திரத்தில் அஜித்தும், கமலி எனும் கதாபாத்திரத்தில் தேவயானியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

1

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதலித்து வரும் அவர்கள் இறுதியாக சந்தித்துக் கொள்வதுதான் படத்தின் கிளைமாக்ஸ். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த ’காதல் கோட்டை’ வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

From Around the web