ரசிகர்கள் அதிர்ச்சி..!! நடிகர் விஜய் தனது காதல் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கிறாரா?

 
1

விஜய் தன் ரசிகையான சங்கீதா சொர்ணலிங்கத்தை கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார் ஜேசன். அனுபவம் பெற்ற பிறகு தந்தையை வைத்து படம் இயக்க விரும்புகிறாராம். விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு மகளாக வந்திருந்தார் திவ்யா. இந்நிலையில் விஜய் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கியுள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

1

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் வழக்கமாக விஜய்யின் பட விழாக்களில் கலந்துக் கொள்ளும் அவரின் மனைவி சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை. அதோடு சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் மட்டும் கலந்துக் கொண்டார். அதிலும் சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை.

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது வெளிநாட்டில் இருக்கும் தனது குழந்தைகளுடன், சங்கீதாவும் அங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Vijay

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக விக்கி பீடியாவின் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. யாரோ சில கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்... அத்துமீறி விக்கிபீடியா பேஜில் மாற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில் விக்கிபீடியோவில் நடிகர் விஜய்யின் பக்கம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

From Around the web