ரன்பீர் கபூர் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!! 

 
1

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளியே வருவது வழக்கம். இது குறித்து புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 

ranbir Kapoor

அந்த வகையில் தனது குடும்பத்தினருடன், வீட்டு அருகே உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது ரன்வீரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடினர். அந்த நேரத்தில் ரசிகர்கள் ரன்பீர் கபூருடன்‌ செல்பி எடுக்க முயன்றார். அந்த நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் கோபம் அடைந்த ரன்பீர் ரசிகரின் செல்பிக்கு இடம் கொடுக்கவில்லை. 

ranbir Kapoor

ஆனால் தொடர்ந்து செல்பி எடுக்க அந்த ரசிகர் முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த ரன்பீர் கபூர், ரசிகரின் செல்போனை புடுங்கி வெளியே வீசினார். ரன்வீரின் இந்த செயல் நெட்டிசன்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் சராமாரி கருத்துக்களை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம் தனது குடும்பத்தினரை எடுக்க முயன்றதால் தான் அப்படி நடந்து கொண்டதாக ரன்பீர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


 

From Around the web