சமந்தாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை சமந்தா, கடைசியாக ஒப்பந்தமாகி நடித்து வந்த திரைப்படம் 'குஷி'. இந்த படத்தில் நடித்து வந்த போது மயோசிடிஸ்( தசை அயற்சி) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் சினிமாவிற்கு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு தற்போது சிகிச்சையில் உள்ளார்.
சமீபத்தில் வெளியான 'யசோதா' படத்தின் டப்பிங்கை கூட சிகிச்சை பெற்றுக்கொண்டே கொடுத்தார். அதேபோன்று படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்டார். நிகழ்ச்சியில் பேசியபோது கூட, கடினமான காலங்களை ரசிகர்களின் அன்பாலும், வேண்டுதல்களாலும் கடந்து வருகிறேன் என்று கூறியிருந்தார். அதேநேரம் சமந்தா வெளிநாட்டில் சிகிச்சை பெற போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சமந்தா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நடிப்பிற்கு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் அடுத்து நடிக்கவிருந்த இந்தி படங்களின் படப்பிடிப்புகளை தள்ளி வைக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.