அசல் கோளாரின் பேச்சால் அதிர்ந்து போன ரசிகர்கள்..!!

 
1

பிக்பாஸ் சீசனில் ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது அசல் கோளார் தான். பெண் போட்டியாளர்களின் முதுகு, கை, கால்,  முட்டி போன்ற இடங்களில் தடவுவது, கடிப்பது போன்று அசலின் இம்மாதிரியான செயல்கள் பலரையுமே முகம் சுழிக்கும் வைத்தது.அசல் கோலார் பெண்களிடம் தொட்டு பேசி பழகிய விதமும், ஆசிம் நடந்து கொண்ட விதமும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அசல் கோலாரை விமர்சிக்கவே ஒரு கூட்டம் இருந்தது. தினமும் அவர் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் பேசும் வீடியோவை மட்டும் கட் செய்துபோட்டு அசல் கோலாரை விமர்சிக்க தொடங்கினர். 

1

இதனாலேயே இவர் மூன்றாவது வாரத்தில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில் அசல் கோளார் முதல் முறையாக அளித்த பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் அவரின் செயல்கள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:" நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களாக இருக்கும் பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை. என் சொந்த வீட்டில் இருப்பது போல், என் நண்பர்களுடன் நெருங்கி பழகுவது போல் நடந்து கொண்டேன். அது வெளியில் இவ்வளவு தவறாக தெரியும் என நினைக்கவில்லை. நான் செய்தது தவறு தான். ஆனால் தப்பான நோக்கத்தில் செய்யவில்லை.. சமூக வலைதளத்தில் வருவதை போல் நான் தப்பான நோக்கத்துடன் நடந்துகொண்டிருந்தால் அது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே தெரிந்திருக்கும். அவர்கள் எப்படி என்னை அனுமதித்திருப்பார்கள்?

பிக்பாஸ் வீட்டில் அத்தனை கேமராகள் இருக்கிறது. அதற்கு மத்தியில் இதுபோன்ற செயல்களில் வேண்டுமென்றே யாராவது ஈடுபடுவார்களா? , நான் தெரிந்து செய்யாத ஒரு விஷயத்தை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

1

உங்களுக்கு அது தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் , எனக்கு மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மறுபடியும் சென்றால் கண்டிப்பாக வேற மாதிரி விளையாடுவேன்”  எனவும் அவர் கூறியுள்ளார்.

From Around the web