அப்பா அமிதாப்பச்சன்... மகள் ராஷ்மிகா...  ‘குட்பை’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

 
1

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். அப்பா - மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை விகாஸ் பாஹ்லின் இயக்கியுள்ளார். 

இவர்களுடன் சாஹில் மேத்தா, ஷிவின் நரங், பாவில் குலாட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

goodbye

இந்த போஸ்டரில் அமிதாப் பச்சன் பட்டம் விடும்போது அருகில் நிற்கிறார். இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From Around the web