அதிர்ச்சியில் திரையுலகம்..!! கோவில் குளத்தில் மூழ்கி உதவி இயக்குநர் மரணம்!

 
1

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன் (41). இவர் மலையாள சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

Deepu

மலையாளத்தில் வெளியான ‘உரும்புகள் உறங்கரில்லா’, ‘ஒன்ஸ் இன் மைன்ட்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக தீபு பாலகிருஷ்ணன் பணிபுரிந்துள்ளார். மேலும், ‘உரும்புகள் உறங்கரில்லா’ படத்தில் நடித்தும் உள்ளார்.

நேற்று முன்தினம் இவர் இரிஞ்சகுலடா பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கோவில் குளக்கரையில் தீபு பாலகிருஷ்ணனின் உடை மற்றும் காலணி இருந்துள்ளது.

RIP

இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோவில் குளத்தில் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு தீபுவின் உடல் மீட்டனர். அவரது மறைவிற்கு மலையாளத் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From Around the web