திரையுலகினர் ஷாக்..!! தெருக்களில் பிச்சையெடுக்கும் பிரபல “சக்திமான்” சீரியல் நடிகை..!!

 
1

சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான் தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் நூபுர் அலங்கர்.இவர் பின்னர் வேறு பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார்.சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் வாழ்க்கையில் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், நூபுர் அலங்கர், தெருக்களில் மக்களிடம் பிச்சை எடுக்கும் புதிய வீடியோ வெளியானது.நுபுர் அலங்கர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் தனது வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் தெருக்களில் பிச்சை எடுக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் நடிகை நாள் முழுவதும் 11 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று கூறுவதைக் காணலாம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்று பிச்சை எடுக்கும் முதல் நாள். சந்நியாசத்தில் பிச்சை எடுப்பது முக்கியம்.” என்று கூறுகிறார். மேலும் சர்க்கரை இல்லாத முதல் தேநீர் ஒரு சன்யாசியால் அவருக்கு வழங்கப்பட்டது. நுபுர் ஒரு கிண்ணத்தில் பிச்சை கேட்கிறார். அவரிடம் கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது.

நூபுர் தனது முதல் பிச்சையில் பெற்ற பணத்தைக் காட்டிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஒரு கோப்பை தேநீர் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கிண்ணமும் உள்ளது, அதில் 21 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் தலைப்பில், நூபுர், “முதல் பிச்சை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர்  கூறும்போது, ''சில காலமாக எனது குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த சமயத்தில் எனது குருவின் ஆலோசனையால் நான் சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டேன். பிச்சை எடுப்பதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. தற்போது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது'' என்றார்.

From Around the web