‘தெய்வ மச்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

 
1

மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் விமல் நடப்பில் உருவாகியுள்ள படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேலா ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

உதய புரொடக்சனுடன் இணைந்து மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘தெய்வ மச்சான்’ படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரியஸ் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘தெய்வ மச்சான்’ படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.


 

From Around the web