முதல் முறையாக நெத்தியடி கொடுத்த சிம்பு...ப்ளூ சட்டை மாறனுக்கா..? 

 
1

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் உருவான  திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. கிராமத்து இளைஞரான முத்து, எப்படி கேங்ஸ்டரான மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படத்தில் மூன்று வெவ்வேறு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இதற்காக தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

1

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு  படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஒவ்வொரு படத்தையும் சீண்டி பார்க்கும் இவர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையும் விட்டு வைக்கவில்லை.அவரது விமர்சனத்தில் பேசியதாவது ‘பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் என்றால், கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம். இதை நன்றாகவே கண்டுபிடித்து மக்கள் போன படத்திலேயே கலாய்த்து விட்டதால் இனி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நம்மை கலைப்பார்கள் என்று இந்த படத்தில் அப்பு குட்டி மூலமாக வாய்ஸ் ஓவரில் கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது கௌதம் மேனனுக்கு இன்னும் அந்த பைத்தியம் முழுதாக குணமாகவில்லை என்பது தெரிகிறது என பேசியிருப்பார்.

1

இதையொட்டி இந்த படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் பத்திரிக்கை சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அதில் சிம்பு கூறியதாவது : “வெந்து தணிந்தது காடு படத்துல என்னோட உடம்ப வச்சு விமர்சகர்களால் எதுவும் எழுத முடியல. ஒரு படத்தை விமர்சனம் பண்லாம், தனிப்பட்ட மனிதனையும், அவனுடைய உருவத்தையும் விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு. என்னால எடுத்துக்க முடியும் நிறைய பேரால எடுத்துக்க முடியாது. தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம். இதை நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன். இவ்வாறு ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் பாகம் கேங்ஸ்டர் கதைக்களம் கிடையாது. ஊரிலிருந்து வந்த முத்து எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் என்பது காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம்தான் முழுமையான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறினார். அதை சீக்கிரம் கௌதம் மேனன் பண்ணணும் என்று சிம்பு கேட்டுக்கொண்டார்.   

From Around the web