ஜி.பி முத்துக்கு அடித்தது ஜாக்பாட்..!

 
1

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து. இவர் மூன்றாவது வரைக்கும் தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட ஜிபி முத்து, முதல் நபராக வெளியேறியும் அதிர்ச்சி கொடுத்தார்.

முதல் இரண்டு வாரத்தில் அந்நிகழ்ச்சியில் “டிஆர்பி” எகிறியது அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். இதனால் இந்த சீசன் இறுதிவரை ஜிபி முத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மகனின் உடல்நிலை கருதி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொள்வதாக அறிவித்தார்.

மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போன கமல்ஹாசன், அவரை வெளியே செல்ல அனுமதித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்துவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது “ஓ மை கோஸ்ட்” எனும் படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ளார் ஜிபி முத்து. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், ஜிபி முத்துவிற்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், அவரை அஜித் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

From Around the web