கமலை முதல் நாளிலே பங்கம் பண்ண ஜி.பி.முத்து..!!

 
1

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தினந்தோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிப்பரப்பப்பட இருக்கிறது. அதனால் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதுதவிர இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் முழுவதும் நேரலையாக ஒளிப்பரப்பப்பட உள்ளது. 

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல் போட்டியாளராக டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து களமிறக்கப்பட்டுள்ளார். 

நேற்று முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தது ஜிபி முத்து தான். அப்போது அவரிடம் பேசிய கமல், யூடியூப்பில் வட்டார மொழியில் திட்டி பேசுவது போல் வீட்டினுள் இருக்க முடியாது என கண்டிஷன் போட்டு வீட்டுக்குள் அனுப்பிவைத்தார். இதன்பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஜிபி முத்து அங்கு சிறிது நேரம் தனியாக இருந்தார்.

1

ரொம்ப நேரமாக அடுத்த போட்டியாளர் வராததால், தனக்கு பயமாக இருப்பதாக கூறி புலம்பினார் ஜிபி முத்து. இதையடுத்து அகம் டிவி வழியே தோன்றிய கமல், அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பேசினார். அப்போது உங்களுக்கே இப்படினா… முதன்முதலில் பிறந்த ஆதாம் ஏவாலுக்கு எப்படி இருந்திருக்கும் என கேட்டார்.

கமலின் பேச்சைக் கேட்டு திரு திருவென முழித்த ஜிபி முத்து, ஆதாமா… அவர் யாரு என கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார் கமல். ஜிபி முத்துவின் இந்த தக் லைஃப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From Around the web