அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாயகி..!!

 
1

லட்சக்கணக்கான இணைய வாசிகளை தன் பக்கம் ஈர்த்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸின் கதாப்பாத்திரங்களையும் மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். அதிலும் டெனெரிஸ் டார்கேரியன் என்ற கதாப்பாத்திரம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்த 32 வயதான ஹாலிவுட் நடிகை எமிலியா கிளார்க் அதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் உலக அரங்கில் நின்று பேசும் கதாபாத்திரமாக டெனெரிஸ் டார்கேரியனே இருந்தது.

இந்நிலையில், எமிலியா கிளார்க் ஒரு தைரியமான பெண்ணாக, ஒரு பயமறியா பெண் சிங்கமாகவே அவரது ரசிகர்கள் உருவப்படுத்தி வைத்துள்ள சூழலிலேயே எமிலியா கிளார்க் தனது உயிர் கொள்ளும் நோய் குறித்து மனம் திறந்து பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Emilia-Clarke

அண்மையில் தனது நோய் குறித்து பேசிய எமிலியா கிளார்க், தனது மூளையில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் குருதிநாள அழற்சி (aneurysms) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு இரண்டு மூளை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எனது மூளையின் சிறு பகுதி பயனற்றதாக உள்ளது. அப்படியிருந்தும் என்னால் சரியாக பேச முடிகிறது. சில நேரங்களில் வெகு கோர்வையாக பேசுகிறேன். இந்த இயல்பே மிகவும் ஆசிர்வாதமானது. இத்தனை பெரிய அறுவை சிகிச்சைகளுக்கும் பிறகு நான் இயல்பாக இருக்கிறேன்.

உலகில் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் இயல்பாக இயங்கக் கூடியவர் மிக மிக மிக அரிது என்றே மருத்துவ உலகம் கூறுகின்றது. சில நேரங்களில் இதை நினைத்து நான் சிரித்துக் கொள்வதும் உண்டு.ஏனெனில் ஸ்ட்ரோக் என்பது மூளையை கடுமையாக பாதிக்கக் கூடியது. ஒரு சில மைக்ரோ விநாடிகளுக்கு ரத்த ஓட்டம் மூளையில் சீராக இல்லாவிட்டாலும் கூட மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

அந்த மைக்ரோ விநாடிகளுக்குள் மூளையின் ரத்த ஓட்டம் மாற்று வழியில் நடந்திருக்கும். ஆனால் ரத்தம் பாயாத அந்தப் பகுதி போனது போனதுதான். தி சீகல் தழுவி உருவாகும் புதிய ப்ளேயில் நான் எதையும் மிஸ் செய்யாமல் நடிக்க முடிகிறது. அந்த அளவுக்கு எனது நினைவாற்றல் சிறப்பாகவே இருக்கிறது.

Emilia-Clarke

எனக்கு இரண்டாவது முறை இது போன்று ஏற்பட்ட போது மூளையில் ரத்தக் கசிவு அதிகமாகவே இருந்ததால், பிழைப்பு சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாலும் சொற்ப வாய்ப்பே இருக்கிறது.

அந்த தருணம் என்னை சுற்றியவர்களுக்கு மோசமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் எல்லாவற்றையும் கடந்து வந்துள்ளேன். மூளை அறுவைசிகிச்சை அல்லது பக்கவாதத்தில் இருந்து மீண்டோருக்கு உதவி வருகிறேன்” என்றார்.

From Around the web