விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் காந்தாரா...!!

 
1

கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா.பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் காந்தாரா விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வரும் நவம்பர் மாதத்தில் காந்தாரா வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

From Around the web