திரையரங்கில் பட்டையை கிளப்பிய காந்தாரா படம் அடுத்த வாரம் ஒடிடியில் ரிலீஸ்..?

 
1

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ள படம் என்றால் அது காந்தாரா திரைப்படம் தான்.   எதார்த்தமான நடிப்பில் வெளியான காந்தாரா தனது வலுவான கதையின் மூலம் தற்போது ஃபேன் இந்தியா திரைப்படமாக  விஸ்வரூபம்  எடுத்துள்ளது.  பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியது. 

இப்படத்தின் கதை கர்நாடகாவில் மூளையில் உள்ள ஒரு மலை கிராமம் அந்த கிராமத்தின் மக்களுக்காக மன்னர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்குகிறார். அவருக்கு பின்னால் வரும் அவரின் வாரிசுகள் அந்த நிலத்தை மக்களிடமிருந்து பிடுங்க முயற்சிக்கின்றனர் கடைசியில் அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பதே காந்தாராவின் கதையாகும்.

1

மேலும்  இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஹீரோ ரிஷப் ஷெட்டி வருகிறார். இந்த முயற்சியில் ஹீரோ வெற்றி பெற்றாரா? இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. கதையை கேட்கும் போது சாதனமான கதை என தோன்றினாலும், அதை ஒரு இயக்குநராக ரிஷப் ஷெட்டி கொண்டு சென்றுள்ள விதம் அபாரம

இக்கதையில் பழங்குடியின மக்களின்  வாழ்க்கை முறை, வழிபாடு மற்றும் கம்பளா என்ற எருமை பந்தயம், பூத கோலா என்ற நாட்டுப்புற நடனம் என படம் முழுக்க முழுக்க எதார்த்த நடிப்பில் உருவாகி இருப்பதால் இப்படம் மிக பெரிய அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இயக்குனர் ரிஷப் ஷெட்டியை தன்னுனடய வீட்டிற்கு அழைத்து அவரை கௌரவ படுத்தியதோடு, தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'காந்தாரா' திரைக்கு வந்து ஒரு மாதம் ஆக போகும் நிலையில், இந்த படத்தின்... ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம், நவம்பர் 24 நான்காம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web