‘கட்டா குஸ்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! 

 
1

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால்  நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களோடு காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி கருணாஸ்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செல்லா அய்யாவு  இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவ் ஸ்டண்ட் கோரியோகிராப் செய்துள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி  நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புத்தாண்டையொட்டி இப்படம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 


 

From Around the web