ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்த கௌதம் மேனன்..!!

 
1

சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படம் முதல் வார இறுதியில் சுமார் ஐம்பது கோடிகளை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில் சமீபத்திய பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு சில விமர்சகர்களால் கொடுக்கப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களைப் பற்றி புலம்பி உள்ளார் .அதிலும் குறிப்பாக பிரபலமான யூடியூபர் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக சாடி உள்ளார் . இது பற்றி பேசிய அவர், “சொல்லக்கூடாதுனு நினைக்கிறேன். ஆனா எனக்கு பயங்கர கடுப்பாகுது. ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது, அவரது யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரங்கள் கிடைப்பதற்காகவும் தான். நீங்கள் விமர்சனம் பண்ணுங்கள். ஆனால் படத்தை கலாய்க்காமல் பண்ணுங்கள்  என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

From Around the web