பேய் வைக்கும் டாஸ்க்.. தப்பிக்க போராடும் காஜல்.. வெளியான ‘கோஸ்டி‘ படத்தின் டீசர்..!!
Nov 1, 2022, 09:05 IST
நடிகை காஜல் அகர்வால்,இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் ‘கோஸ்டி” இந்த படத்தில்,யோகிபாபு, கே. எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஊர்வசி என தமிழ் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். காமெடி மற்றும் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக இருக்கும் காஜல் பேயிடம் மாட்டி கொள்கிறார். போலீஸ் காஜல் சபிக்கப்பட்டதால், அவரிடம் பேசுபவர், குழந்தை போன்ற குரலைப் பெறுகின்றனர். இறுதியில் அந்த பேய் யார், காஜல் எப்படி இதிலிருந்து தப்பிக்கப்போகிறார் என்பதே படத்தின் மீதி கதை.