கார்த்தி பட நடிகைக்கு பெண் குழந்தை!! திரை பிரபலங்கள் வாழ்த்து..!!
 

 
1

கடந்த 2011-ம் ஆண்டு உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்‌. சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில்  நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.

Pranitha

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து அதர்வா  நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.  

இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்படி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் பிரணிதா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதவிட்டுள்ளார். திரையுலகினர் உள்ளிட்ட பலரும் பிரனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web