எப்பவுமே கடவுள் மனுஷனோட விளையாடமாட்டான் ... அப்போ மனுஷனோட விளையாடுறது.... வெளியான தமிழரசன் ட்ரைலர்..!!  

 
1

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ சூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரித்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் காத்திருக்கிறது. தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடிகள் குறித்த கதைக்களம் கொண்ட இப்படம் ஆக்‌ஷன் அதிரடியில் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அதிரடியில் மிரட்டலான உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

From Around the web