கோல்டன் குளோப் விருதுகளை வென்ற பிரபல கித்தார் இசைக் கலைஞர் மரணம்!!

 
1

1944-ல் இங்கிலாந்தில் பிறந்தவர் ஜெஃப் பெக். 1960 மற்றும் 1970-களில், யார்ட்பேர்ட்ஸ் குழுவில் பல இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதேபோல், அனைத்து வகையான இசைக்கருவிகள் ஆல்பங்கலான ப்ளோ பை ப்லோ, வயர்டு  ஆகிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்.

Jeff Beck

1975-ம் ஆண்டில் ஜெஃப் பெக் அவரது தனி இசை  வாழ்க்கையை ‘ப்ளோ பை ப்ளோ’ என்ற ஆல்பத்தில் இருந்து தொடங்கினார். இந்த ஆல்பம் மூலம் அவரது இசையின் பார்முலாவை மறுகட்டமைத்து ஜாஸ் முதல் ராக் மற்றும் ஃபங்க் வரையிலான இசைகளில் வித்தியாசமான  முறையை கையாண்டார். இந்த முறைகளால் அவர் எதிர்பாராத வெற்றியை அடைந்தார்.

‘ப்ளோ பை ப்லோ’ பில்போர்டு டாப் 5 ஆகிய இசை ஆல்பங்கள்  ஒரு மில்லியனிற்கும் அதிகமான பிரதிகள் விற்று  பிளாட்டினம் வெற்றி பெற்றது. கித்தார் இசை வரலாற்றில் மிகவும் திறமையான மற்றும் பிரபலமடைந்த கித்தார் கலைஞர்களில் ஒருவரான ஜெஃப் பெக், தெற்கு இங்கிலாந்தில் உள்ள கிராமப்புற தோட்டமான ரிவர்ஹாலில் மருத்துவமனையில் கடந்த  செவ்வாய்க்கிழமை (ஜன.10) உயிரிழந்தார்.

RIP

இதனையடுத்து பெக் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் மெலிசா டிராகிச் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பெக் பல கிராமிய விருதுகளையும், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web