‘குக் வித் கோமாளி’ புகழ் சொன்ன குட் நியூஸ்..!!

 
1

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து சினிமாவில் பிசியான நடிகராக மாறியுள்ளார். 

குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சூர்யா, சந்தானம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார். இதையடுத்து புதிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். இதுதவிர ‘ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். 

இதற்கிடையே பென்சியா என்ற பெண்ணை காதலிப்பதாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார். இதையடுத்து புகழுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் புகழ்  - பென்சியா திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் புகழ் - பென்சியா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1

From Around the web