அஜித்தின் அடுத்த படத்திற்கு அண்ணா சாலையை போன்ற பிரமாண்டமாக செட்..??

 
1

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி 3-வது முறையாக புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இப்போது  நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
 
சென்னை அண்ணா சாலையை போன்ற செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web