டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமணம்..?

 
1

தமிழ் சினிமாவில் கதாநாயககியாக அறிமுகமானவர் ஹன்சிகா முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து இவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் .

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என பெயர் எடுத்த ஹன்சிகா விஜய், தனுஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . இதுமட்டுமல்லாமல் பன்மொழி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் காதலரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹெல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பல நாட்களாக சொல்லாமல் இருந்த உண்மையை சொல்லி கல்யாணத்தை கமுக்கமாக முடித்தார்.

இவர் திருமணத்திற்காக 450 ஆண்டு பழமையான ஜெய்பூர் அரண்மனை பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டு அங்கு அவரின் திருமண விழா 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது .

இருப்பினும் திருமணம் குறித்து இதுவரை பெரிதளவு புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிராமல் இருந்த ஹன்சிகா தற்போது ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் தங்களது திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியாக வெளியிடவுள்ளார்.

இதுகுறித்து ஹன்சிகா அறிவிப்பு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வழக்கமான ஹன்சிகாவின் க்யூட் ரியாக்ஷனுடன் நகைச்சுவை கலந்து வெளிவந்து வீடியோவை தற்போது ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web