வைரலாகும் ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ்..!!

 
1

குழந்தை நட்சத்திரமாக 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. 

தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை,  ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஹன்சிகாவிற்கும் தனது நீண்ட நாள் காதலரான  சோஹியல் கட்டுரியா என்பவரை  திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது, தொடார்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தற்பொழுது ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ கசிந்திருந்தது. அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.


 

From Around the web