ஆண்டவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!  இந்தியன் 2 புதிய போஸ்டர் வெளியீடு..!! 

 
1

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் . 60 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய இந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்த நாள்  

1954- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர். ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் கமல்ஹாசன். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார்.1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  

1

கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய படங்கள் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தன. ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.1977-ல் கன்னடத்தில்‘கோகிலா’ என்ற  படம் மூலமாக அறிமுகமானார். ‘கவிதா’ என்ற பெங்காலி மொழி படத்திலும் நடித்துள்ளார். அதேபோல பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்தி படத்திலும் நடித்தார். இதை மூலமாக இந்திய முழுவதும் பிரபலமானார்.இவரது 100-வது படம் ‘ராஜபார்வை’, இதில் பார்வை இழந்தவராக நடித்து இருந்தார். இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். 

உலக நாயகன் என்ற பட்டத்திற்கு பொறுத்தமான ஒரே மனிதர் கமல்ஹாசன் மட்டுமே. சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.

1

ஆனால், கமல்ஹாசன்,  தனது  நடிப்புத் திறமை காரணமாக, ‘உலகநாயகன்’ என்று ரசிகர்களிடம் பட்டத்தைப் பெற்றுள்ள கமல்ஹாசன், தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்த கமல்  நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் சிறந்த மொழிப்புலமை பெற்றவர். தமிழகத்தில் பேசப்படும் சென்னை தமிழ் முதல் கொங்கு தமிழ் வரை அத்தனை தமிழையும் அசால்ட்டாக பேசி ஆச்சரியப்படச் செய்வார். அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பெரும்பாலான இந்திய மொழிகளை பேச வல்லவர்.

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 பட புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.


 

From Around the web