நடிகை காஜலுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா?
Apr 21, 2022, 07:05 IST

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன் பின்னர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.காஜல் அகர்வால் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரியில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது காஜலுக்கு பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.காஜல் கிச்லு ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையடுத்து தனது மகனுக்கு அழகான பெயர் ஒன்றை காஜல் அகர்வால் வைத்துள்ளார். ‘நெய்ல் கிச்சுலு’ என்ற அந்த க்யூட் பெயர் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.