ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம்..!! திருமணத்தில் குவிந்த ஹீரோயின்ஸ்..!!

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே இவரது சினிமா கெரியர் உச்சத்துக்கு சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரையில் விளையாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றார்.
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ரைசாவுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். அதைத்தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி ஹிட் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை தேடித் தந்ததுடன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது பிசியான ஹீரோவாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது ட்விட்டர் பதிவின் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும் என்று பேச்சுவார்த்தை எழுந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு திரையுலகினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஹரிஷ் கல்யாண்& நர்மதா திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்ஸும், அவரின் நெருங்கிய தோழிகள் சிலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அந்த வகையில் நடிகைகள் இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நேரில் வந்து ஹரீஷ் கல்யாணை வாழ்த்தினர்.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தான் ஹரீஷ் கல்யாணும், பிந்து மாதவியும் நண்பர்களாகினர். அந்நிகழ்ச்சி முடிந்து 5 ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்களது நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.