ரகசிய திருமணம் செய்து கொண்டாரா ராஜாராணி புகழ் நடிகை தன்யா..!!

 
1

7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து நல்ல அங்கீகாரம் பெற்றார்.தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க அங்கு படங்கள் நிறைய நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை தன்யாவிற்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக செய்து பரவி வருகிறது .இந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள கல்பிகா, 'தன்யா இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். ஒரு வருடம் ஆகியும் அதனை அதிகாரப்பூர்வமாக இருவருமே அறிவிக்கவில்லை என கல்பிகா கூறியுள்ளது, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் அவர் தற்போது நடித்துவரும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்றும், இதற்கு காரணம் அவருடைய கணவர் தான் என தெரிவித்துள்ளார். கல்பிகா பேசிய வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதனை தன்யா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி நீக்கி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

From Around the web