காதலில் விழுந்தாரா ராஷ்மிகா...?? அவரே சொன்ன தகவல்..!! 

 
1

பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு 'புஷ்பா' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதையடுத்து இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். 

தமிழில் விஜய்யின் 'வாரிசு' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து தனுஷ் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியில் 'குட்பை', தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நடிகர் விஜய் தேவரதொண்டாவுடன் ஊர் சுற்றி வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பட ப்ரோமோஷன் விழா ஒன்றில் பேசிய ராஷ்மிகா தான் காதலிப்பதாக வந்த வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதில், “காதலித்தால் அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். அதேபோல் காதலில் பொறுமை அவசியம். தற்போது அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை. தற்போதைய சூழலில் என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கு கூட என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. எனவே எதிர்காலத்தில் காதல் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

From Around the web