அஜய் ஞானமுத்து கூட்டணியை முறித்து கொண்டாரா சீயான் விக்ரம்..? 

 
1

அஜய் ஞானமுத்து - விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘கோப்ரா’. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. மோசமான திரைக்கதை மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றின் சொதப்பாலால் இப்படம் படுதோல்வியை சந்தித்தாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் குறைந்தபட்ச வசூலை கூட ஈட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இந்த படம் வெளியாகவதற்கு முன்னரே விக்ரமின் அடுத்த படத்தை அஜய் ஞானமுத்துதான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தின் படுதோல்வியை அடுத்து அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்திலிருந்து விக்ரம் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web