ராஷ்மிகா மந்தனாவுடன் காதலில் விழுந்தாரா விஜய் தேவரகொண்டா… ?

 
1

தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும். இந்த படத்தில் நடித்தது போன்று இல்லாமல் ரியல் ஜோடி போல வாழ்ந்தார்கள். இந்த பிறகுதான் இருவரும் ரசிகர்களிடையே பெரிய பிரபலம் அடைந்தனர். 

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது, அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இவர்கள் காதல் வதந்தியை சிக்க காரணமாகவும் இருந்தது.இருவரும் “வெறும் நண்பர்கள்” என்று கூறிக்கொண்டாலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இருவரும் சுற்றுலாவிற்கு ஒரே இடங்களுக்கு சென்றது போன்றவை இவர்கள் காதல் வதந்தி குறித்து வெளியான தகவல்களை வலுக்க செய்தது.

இதற்கிடையே ‘லிகர்’ படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இருவரும், ப்ரோமோஷனுக்காக காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முந்தைய வாரம் சமந்தா சீசனில் பங்கேற்ற பிறகு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டாவது தென் நட்சத்திரம் விஜய் தேவரகொண்டா. இந்த வாரம், அனன்யா மற்றும் விஜய் இருவரும் நிறைய கிசுகிசுக்களைப் பகிர்ந்து கொண்டனர் .

அந்த நிகழ்ச்சியின் போது அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான தொடர்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல், மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்று அனன்யாவிடம் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பியபோது, ​​​​அவர் விஜய்யைப் பற்றி கூறி மறைமுகமாக ராஷ்மிக்கா மந்தனாவை பற்றி போட்டுடைத்துள்ளார்.

அதில் முதலில் பேசிய அனன்யா, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதல் குறித்து மறைமுகமாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா என்னுடைய நெருங்கிய நண்பர். அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அவர் என்னுடைய டார்லிங். அவரை நேசிக்கிறேன் என்று கூறி காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

From Around the web