‘பாக்யலட்சுமி’ சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியானதா ? அவரே சொன்ன பதில்..!! 

 
1

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதில் சூரியுடன் இணைந்து புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு விமலின் விலங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

சினிமாவை தவிர பல சீரியல்களிலும் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார். அதில் வம்சம், வாணி ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்கள் முக்கியமானவை. தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

1

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்றார். அதில் பேசிய அவர், என்னுடைய சகோதரி திடீரென்று ஒரு நாள் போன் செய்து என்னுடைய அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.

அந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் இருந்ததால் அந்த வீடியோவை அனுப்ப சொல்லி என்னுடைய சகோதரியிடம் கேட்டேன்.  அந்த வீடியோவை பார்த்தபோது தான்  அது நான் இல்லை என்று தெரிந்தது. அது முழுக்க முழுக்க மார்பிங் செய்யப்பட்ட வீடியோ. இந்த விஷயத்தை என் குடும்பத்தினரிடம் கூறி புரிய வைத்தேன். என் நிலைமையில் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார் என்று கூறினார். 

From Around the web