'ஜெயிலர்' படத்தின் மிரட்டலான தீம் கேட்டு இருக்கீங்களா ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அனிரூத் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. வித்தியாசமான ஜெயில் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஒய்புபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இப்படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தீம் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த தீம் பிரபல இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#MuthuvelPandianTheme is now available on audio streaming platforms!🔥
— Sun Pictures (@sunpictures) December 15, 2022
▶️ https://t.co/HqmXMnVjlg@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian pic.twitter.com/PEIAc3PIxJ