சமுத்திரக்கனியின் மகனை பார்த்து இருக்கீங்களா ?
உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி. அதையடுத்து நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட பல படங்களை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.
அதையடுத்து சிறந்த நடிகராகவும் சமுத்திரக்கனி கால்தடம் பதித்தார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன குறிப்பாக மக்களுக்கு நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துக் கூறுவதில் சமுத்திரக்கனியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்று சொல்லலாம்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதே போல் தனுஷ் வாத்தி என பல படங்களை நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன், அவரை போலவே தான் வந்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அதுபோல அவர் ஒரு ஷார்ட் பிலிம் (. ‘அறியா திசைகள்’) எடுத்து அது வைரலும் ஆனது.
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…. வெல்வோம்…💪💪💪💪 pic.twitter.com/CtmRwrdqVc
— P.samuthirakani (@thondankani) January 1, 2023