நடிகை அசின் மகளை பார்த்துஇருக்கீங்களா...அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்! 

 
1

‘உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அசின், ‘கஜினி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் அதிக சம்பளம் வாங்கு நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா மீது காதல் வயப்பட்ட அசின், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி ராகுலை திருமணம் செய்துக் கொண்டார்.கடந்த 2017 இவர்களுக்குப்  பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் ரகசியமாக வந்திருந்த இந்த தம்பதி  அரினின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதுதான் அரினின் புகைப்படங்களை  முதல்முறையாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருக்கும் அசின் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது ஒரிரு பதிவுகளை பதிவிடுவார்.

இந்நிலையில் தனது மகள் அரின் கடற்கரை மணலில் தனது தோழிகளுடன் விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

1

1
 

From Around the web