விக்ரம் வேதா ஹிந்தி படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்திருக்கீங்களா..!! இதோ உங்களுக்காக..!! 

 
1

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மாதவனும், விஜய் சேதுபதியும் ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து நடிப்பில் மிரட்டியிருந்தனர்.படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மாதவனுக்கும் விஜய் சேதுபதிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தான் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். 

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.  வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சயீப் அலிகானும் நடித்துள்ளனர். . இந்தியிலும் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் படத்தை இயக்கியுள்ளனர்.விக்ரம் வேதாவின் ஹிந்தி ரீமேக் செப்டம்பர் 30, 2022 அன்று திரைக்கு வர உள்ளது, மேலும் இப்படம் வட இந்திய வட்டாரங்களில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1

படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் இப்போது படத்திலிருந்து ஒரு புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர், மேலும் இது ஹிருத்திக் ரோஷனின் வேதா கதாபாத்திரம் இடம்பெறும் காட்சிகளை உருவாக்குவதைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. 

தமிழ் பதிப்போடு ஒப்பிடும்போது, ​​தயாரிப்பாளர்கள் வேதாவை இந்தி ரீமேக்கில் மிகவும் கொடியதாகவும் வன்முறையாகவும் ஆக்கியதாகத் தெரிகிறது. 

From Around the web