பிக்பாஸ் 6  டைட்டில் வின்னர் இவர் தான்..!

 
1

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை நடைபெற்றது. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி அமர்களமாய் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். 

biggboss 6

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் அசத்தலான உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில்  15 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதியில் 6 போட்டியாளர்கள் மட்டும் இருந்தனர். அதில் பணப்பை டாஸ்க்கில் 3 லட்சத்துடன் கதிரவன் வெளியேறினார். அதன்பிறகு அமுதவாணன் 11.75 பணத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்றார். இதுதவிர மைனா நந்தினி மட்டும் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். 

கடைசியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிப்போட்டியாளராக இருந்தனர். இந்த மூவரில் யார் டைட்டிலை வெற்றி பெறுவார் என்ற பதற்றத்துடன் நிகழ்ச்சி சென்றது. 

biggboss 6

இறுதியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்து வரப்பட்ட போட்டியாளர்களில் அசீம் வெற்றிப்பெற்றதாக கமல் அறிவித்தார். அவருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டமும், 50 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இடத்தை விக்ரம் பெற்றார். அவருக்கு 25 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை ஷிவின் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

From Around the web