இவர் தான் குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர்..!! 

 
1

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையலுடன் காமெடியும் கலந்திருக்கும் இந்நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த சமையல் செய்யும் போட்டியாளர்களும், மற்றொரு புறம் அவர்களை கலாட்டா செய்யும் கோமாளிகளும் இடம்பெறுவர். 

இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் கலகலப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதனால்  3வது சீசனின் வெற்றியாளராக யார் வரப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

1

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் சீசன் 3ல் டைட்டில் வின்னர் ஆனவர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3ன் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்றது. இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ்,கிரேஸ் ஸ்ருதிகா, இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள்.

தற்போது நிகழ்ச்சியின் கடைசி ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிகா சிறப்பாக சமைத்து டைட்டில் வின்னர் வென்றிருக்கிறார். நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும்.

From Around the web