டேய்.. போடா எச்ச பயல... மேடையில் நேருக்கு நேர் சண்டையிட்ட பயில்வான் மற்றும் ராஜன்..!!
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்தும் வருகிறார். நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக விட்டு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், கட்சிக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன் ராஜனிடம் சம்பந்தமில்லாமல் கேள்விகளை கேட்டார். இதற்கு ஆரம்பத்தில் பொறுமையாக ராஜன் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என்னைப் பற்றி ஏன் மேடையில் பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் பயில்வான். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவருமே வாடா போடா என்று ஒருமையில் பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ராஜன் மாமா பயலே போடா எச்சக்கலை நாயே என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டி இருக்கிறார்.‘உங்களுக்கு பதில் சொல்ல நான் இங்கு வரவில்லை. உனக்கு பதில் சொல்ற இடம் இது இல்ல. வா தனியா பேட்டி வச்சுக்கலாம். ரெண்டு பேரும் பேட்டி வச்சுக்கலாம். அங்க வாங்க. இந்த மேடை தயாரிப்பாளர் போட்ட மேடை.எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையப் பத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்திட்டு இருக்க. ஒவ்வொரு நடிகைகள கேவலப்படுத்திட்டு இருக்க. பெட்ரூம் பத்தியே பேசுற. இந்த மிரட்டல் எல்லாம் வேற ஆளுக்கிட்ட வச்சுக்க.’ என்று பேசினார்.
சினிமாவில் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளர் ராஜனும், பயில்வான் ரங்கநாதனும் மோதிக் கொண்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.