பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்டாகும் ஹிந்தி "டசக்கு டசக்கு" பாடல்..!! 

 
1

கடந்த 2017ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’. இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான், நடிப்பில் அதே பெயரில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், அந்தப்படத்தில் இருந்து "Alcoholia" பாடல் வெளியாகியுள்ளது. சேட்டா என்ற கதாபாத்திரத்திற்கு வேதா கதாபாத்திரம் பரோட்டாவை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும். தொடர்ந்து பார்ட்டி நடக்க, "டசக்கு டசக்கு" பாடல் வரும். ஹிந்தியில் அதே சிச்சுவேஷனில் "Alcoholia" பாடல் வருகிறது. இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்டாகி வருகிறது.

175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 

From Around the web