ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம் இது தான்... அதிகாரபூர்வ அறிவிப்பு..!!  

 
1

சிம்பு நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். அந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்க உள்ளார். ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியாகும் ஏழாவது படம் இது.

1

எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என தொடர்ச்சியாக நல்ல படங்களை தயாரித்து வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் படத்தைத் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், படத்தில் பணியாற்றும் இதர நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web