“எத வேணாலும் காட்டுறேன் யா” ஹாஸ்டல் பட ட்ரைலர் வீடியோ.!
Apr 22, 2022, 12:21 IST

அசோக் செல்வன் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஹாஸ்டல். இந்த படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த ஆதி கப்யாரே கூடமணி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
இந்த திட்டத்தில் பிரியா பவானி சங்கர், ஆர் ரவீந்திரன், சதீஷ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் உள்ளிட்ட பல அப்டேட்டுகள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.