நடிகை குஷ்புவின் உருக்கமான பதிவு..!! ரசிகர்கள் பிராத்தனை செய்யுமாறு ட்வீட்..!!  

 
1

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பிறந்த குஷ்பு. இவரது இயற்பெயர் நகத்கான். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரானகுஷ்பு, தான் ஒரு முஸ்லிம் என்று காட்டிக்கொண்டதே இல்லை. தற்போது பாஜகவில் இணைந்துள்ள குஷ்பு, கட்சி பணிகள், நடிகை, தயாரிப்பாளர் என பல்வேறு பரிணாமங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தைத் தயாரித்த அவர், தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மின்சார கண்ணா படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

Kushboo

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு, கடந்த சில தினங்களாகவே, ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவையும் போடாமல் இருந்தார். குஷ்புக்கு என்ன ஆச்சு? என்று அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி கொண்டே இருந்த நிலையில், தற்போது அவரே அது குறித்து நேற்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், என்னுடைய சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டரில் கடந்த 4 நாட்களாக இருக்கிறார். இன்று அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குஷ்புவின் சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

குஷ்புவின் இந்த ட்வீட்டினை அடுத்து, பாஜக மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் உட்பட பலரும் பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் சகோதர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் லட்சுமி ராமச்சந்திரனும், சகோதரருக்காக வேண்டிக்கொள்வதாக ட்வீட் பதிவிடுள்ளார். மேலும், ஏராளமான தொண்டர்களும், ஆதரவாளர்களும், குஷ்புவுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்து வருகிறார்கள்.. சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web