இணையத்தில் புதிய படங்கள் எப்படி பதிவேற்றம் செய்யப்படுகிறது..? 
இதன் பின்னணியில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் ட்ரைலர்..!!

 
1

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் ‘குற்றம் 23’ படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை அடுத்து இருவரும் பார்டர் படத்திற்காக கூட்டணி அமைத்தனர். பார்டர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி படேல் நடித்துள்ளார். ரெஜினா காசான்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணி புதிய வெப் சீரிஸுக்காக கூட்டணி அமைத்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைபர் கிரைம் குற்றங்களை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகியுள்ளது. விகாஸ் படிஸா இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் நேரடியாக சோனி லைவ் ஓடிடித்தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

From Around the web