சுந்தர் சி கதாநாயகன் ஆனது எப்படி ? அவரே சொன்ன பதில்..!!
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த சுந்தர் சியிடம், நீங்கள் ஏன் நடிகராக விரும்பினீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த இயக்குனர், படத்தில் நடிப்பதற்கு 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் கேட்பார்கள். அவ்வளவு சம்பளம் கொடுத்தால். படத்திற்கு தேவையான ஓபனிங் கொடுக்க வேண்டும். ஒரு நான்கு நாட்களாவது திரைப்படம் ஹவுஸ் புல்லாக வேண்டும். அதற்குப் பிறகு படத்தின் திரைக்கதையை அதை பார்த்துக் கொள்ளும். இந்த ஹீரோக்கள் பண்ற அட்டூழியம் இருக்கே அதிலும் சிலரால் ஒருநாள் கூட்டம் கூட கூட்ட முடிவதில்லை. அத்தனை கோடி கொட்டிக் கொடுப்பதை விட நம்மளே நடித்தி விடலாம் என்று தான் நாயகனானேன் என் கூறியுள்ளார்.

மேலும் பேசிய சுந்தர்சி, தலைநகரம் படத்தில் நடிப்பதற்காக ஆஸ்கார் ரவிச்சந்திரன் பல ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் எந்த ஹீரோவும் முடிவாகவில்லை. பின்னர் அவரிடம் சென்று நீங்கள் இவ்வாறு அனைத்து நடிகர்களை புறக்கணித்தால் நான் தான் ஹீரோவாக வேண்டும் என கூறினேன் உடனடியாக ஓகே சொன்ன தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நீங்களே நாயகனாக நடிங்க நான் தயாரிக்கிறேன் என்று கூறினார். அதன் மூலம் தான் நான் நாயகன் ஆனேன் என கூறியுள்ளார்.
 - cini express.jpg)