விபத்துக்கு பின் நடிகை ரம்பா தற்போது எப்படி இருக்கிறார்…அவரே வெளியிட்ட வீடியோ..!!
Nov 3, 2022, 11:05 IST
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வார்.
நேற்று முன்தினம் திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது ரம்பா மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தங்களுக்காக பிரத்தனை அனைவருக்கும் நன்றி என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
 - cini express.jpg)